தோழர் உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!
Saturday, August 10th, 2024
மறைந்த மூத்த தோழரும் தனது விருப்பத்துக்குரியவருமான உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி மரியாதை செலுத்தினார்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர் உதயன்) கடந்த 28.06.2024 அன்று மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் இன்றையதினம் 10.08.2024 நெடுந்தீவிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற அமைச்சத் அஞ்சலி மரியாதை செலுத்துயதுடன் அவரது நினைவுகளையும் நினைவுகூர்ந்ததுடன் தோழரின் உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்
Related posts:
முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி ...
தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது- கட்சியின் ஊடகச் ச...
|
|
|


