தொழில் முறைகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்ட ரீதியான இடையூறுகளை ஒழுங்கமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Wednesday, February 9th, 2022

நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்,  தங்கள் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழில் முறைகளை முன்னெடுப்பதில் காணப்படும் சட்ட ரீதியான இடையூறுகளை நோக்கி – ஒழுங்கமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து  வேண்டுகோள் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட வரைபுகளுக்கு உட்பட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்காத வகையில் தீர்மானங்கள் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இன்றைய கலந்துரையாடலில், தெஹிவளை பிரதேசத்தில் சுழியோடி சென்று அம்புகளை பயன்படுத்தி மீன்களை பிடிப்போர் –  களுத்துறையில் கரைவலை தொழில் ஈடுபடுவோர் – உள்ளூர் இழுவைமடி  வலைத் தொழிலாளர்கள், போன்றோர் எதிர்கொள்ளும் சட்டரீதியான சிக்கல்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: