தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக  மக்களுக்காய் பெரும்பணி செய்தவர்கள் நாம் – பூநகரியில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 24th, 2018

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை அதன் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கான வாழ்க்கையை உறுதிப்படுத்திப் பாதுகாகக்கவேண்டிய பொறுப்பை உணர்ந்து நாம் எமது செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி கரியாலை நாகபடுவான் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகாலங்களில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். யுத்தம் நிறைவுகண்டு 8 வருடங்களாகியுள்ள நிலையில் கூட இவர்களது வாழ்வு நிலை என்பது இற்றைவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்துவருகின்றது.

ஆனாலும் கடந்தகாலங்களில் இவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து நாம் வீடமைப்பு வசதி, மின்சாரம்,குடிநீர்,கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைத்துக் கொடுத்து அவர்களது மறுவாழ்வுக்கான பல பணிகளை செய்துள்ளோம்.

இவ்வாறாக நாம் முன்னெடுத்த பணிகளின்போது பல சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டிருந்தபோதிலும் எமது தற்துணிச்சலுடன் கூடிய அர்ப்பணிப்புக்களே இவற்றைச் செய்துமுடிக்கக் காரணமாகியிருந்தது. ஆனாலும்  இன்றும் கூட பல மக்களின் வாழ்வில் ஒர் இயல்பநிலை தெற்றுவிக்கப்படாத சூழல் இருந்தவருகின்றது.

அந்தவகையில் இன்றுள்ள சூழலைப் பாதுகாத்து அதனை முன்னேற்றுவதே எமது பாரிய பணியாகவுள்ளது. அதை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் தமது ஆதரவுப் பலத்தை எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு தரவேண்டும். அவ்வாறு முழுமையான ஆதரவுப்பலத்தை மக்கள் எமக்கு வழங்குவார்களயானால் நிச்சயம் நாம் தமிழர் பிரதேசமெங்கும் ஒர் ஒளிமயமான சூழலை உருவாக்கிக் காட்டுவோம் என்றார்.

Related posts:


வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலிய...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன்...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...