மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 26th, 2018

எந்த முறையில் மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் ஆனால் குறித்த மாகாணசபைத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டபின் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்டபில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

மாகாண சபை தேர்தலை புதிய முறைமையில் நடத்துவதா? அல்லது பழைய முறைமையில் நடத்துவதா? என்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையே எழுந்துள்ள முரண்பாடு காரணமாக தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்வதற்கு இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமையால் இன்றையதினமும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

ஆனாலும் எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புதிய முறையிலோ அன்றி பழைய முறையிலோ மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும் எமக்கு பிரச்சினை கிடையாது. அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் மாகாணசபைத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன்  சிறுபான்மையினர் ஒருவரும்  பாதிக்கப்படாத வகையிலும் அது தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் வகையிலும் உறுதிப்படுத்தப்பட்டு தேர்தல் நடைபெறவேண்டும். அதுவே எமது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே – மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தேர்தலை புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து இன்றையதினம் ஆராயப்பட்ட நிலையில் கட்சிகளுக்கிடையே எதுவிதமான பொது இணக்கமும் காணப்படாத நிலையில் குறித்த கூட்டம் நிறைவுற்றுள்ளது.

இந்த இழுபறி நிலை தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அனைத்துக் கட்சிகளும் தமக்கிடையே உள்ள முரண்பாடுகள் தெடர்பில் ஆராய்ந்து ஒரு பொது இணக்கப்பாட்டை வரும் புதன்கிழமைக்கு முன்னர் எட்டி அதனை எதிர்வரும் புதன்கிழமை தனக்கு தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன...
குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க ...
யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் 'ஏற்றுமதிக் கிராமம்' திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!