தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சம்பிரதாயபூர்வ சந்திப்பு!
Thursday, February 11th, 2021
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
திருச்சபையின் முன்னாள் பேராயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிநி எஸ். ஜெபநேசன் மற்றும் அருட்பணி லிங்கேஸ்வரன், அருட்பணி சதீஸ் டானியல் ஆகியோர் கலந்து கொண்ட குறித்த சந்திப்பில் சமகால நிலவரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
பேராயர் தலைமையிலான குழுவினரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே - யாழ் பல்கலை மாணவர்கள்!
தீரா பிரச்சினைகளோடு அரச மருத்துவத் துறை இயங்குகின்றது - டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
|
|
|


