வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Monday, November 7th, 2016

தமிழர் வரலாறு சரியானதாக வரலாற்று நூல்களில் உள்ளடக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் இன நல்லிணக்கத்துடன் கூடிய ஒரு நிரந்தர தீர்வுகளை எட்டமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வரலாற்றுத்துறை போராசிரியர்கள் மற்றும் தமிழ் துறை வல்லுநர்களுடன் தமிழ் மாணவர்களது பாடநூல்களில் உள்ளடக்கப்படும் தமிழர் வரலாறுகள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு ஆராய்ந்தறிந்து கொண்டபோதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மாணவர்களது வரலாற்றுப் புத்தகங்களில் தமிழரது வரலாறுகள் திரிபு படுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் அச்சிடப்படுவதாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக தமிழரது வரலாறுகள்

தமிழ் மாணவர்களது வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் வரலாறுகள் அச்சிடப்படும்போது பல தவறுகளுடனும் இருட்டடிப்புகளுடனும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ் வரலாறு மறைக்கப்படுவதாக தெரிவித்து குறித்த விடயம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு  ஒரு தடையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டி தமிழரது வரலாறுகள் சரியானதாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பாடப் புத்தகங்களில் அச்சிடப்படவேண்டும் என  டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் துறைசார் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களது குறித்த விடயம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தமிழ் பாடப்புத்தகங்களில் தவறுகள் காணப்பட்டால் அவை தொடர்பாக கவனம் செலுத்த தாம் தயாராக உள்ளதாக தெரிவித்ததற்கமைய  தமிழ் வரலாற்று புத்தகங்களில் உள்ள தவறுகள்  மற்றும் மறைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன்  டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமிழ் பாடநூல்களில் ஏற்படுகின்ற தவறுகளுக்கு பிரதான காரணமாக சிங்கள மொழிபெயர்ப்பை தமிழ் மொழியில் பிரசுரிப்பதாலும் புலமை சார் வல்லுநர்கள் அதில் அங்கம் வகிக்காமையும் உள்ளதாகவும் இதை நிவர்த்தி செய்ய தமிழ் வரலாற்று துறைசார் வல்லுநர்களை  குறித்த உயர்மட்ட சபையில் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் எற்பாடு செய்யவேண்டும் எனவும் பேராசிரியர்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக துறைசார்ந்த வல்லுநர்களுடன் உயர்மட்ட சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அதனூடாக ஒரு நல்லிணக்க பொறிமுறைகளை ஏற்படுத்தி மாற்றங்களை கொண்டவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 img_stan_baby copy

Related posts: