போராட்டக்காரரை அரவணைத்துக் கொள்ள வேண்டும். – டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!

Wednesday, May 11th, 2022

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கும் அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பாளர், பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சூம் ஊடாக கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம், பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மக்கள் எதிர்கொள்ளுகின்ற இடர்களை துடைப்பதை பிரதான நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்படையில் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வன்முறைகளின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்ற எமது நம்பிக்கையை போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:

தற்கொலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசிடமோ மாகாண அரசிடமோ உரிய திட்டங்கள் எதுவும் கிடையாது!
நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...

வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதியால...