தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

தீவகப் பகுதியில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் துறைசார் தொழிலாளர்களுக்கான விசேட செயலமர்வு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வின்போது அனலைதீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, வேலணை போன்ற பகுதிகளில் கடலட்டை வளர்ப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் தேசிய நீர்வாழ் உயிரின அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் நிருபராஜ் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது குறித்த கடலட்டை வளர்ப்பு அதன் அறுவடை தொடர்பிலும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அத்துறையை மேற்கொள்ளவுள்ள தொழில் துறைசார் தரப்பினர் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !
1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...
|
|