வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !

Friday, December 23rd, 2016

வறிய மக்கள் தமது வாழ்வியல் சார்ந்து எடுக்கும் முயற்சிகளுக்கும் நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுக்கத் தயாராக உள்ளோம். அதேநேரம் எடுத்துள்ள முயற்சிகளின் நோக்கங்களில் உறுதியுடன் இருந்து அதன் இலக்கை அடையும்வரை நீங்கள் உழைத்து வெற்றிகாண வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்’ நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கோப்பாய் பிரதேசத்திலுள்ள பெண்களுக்கான சுயதொழில் அமைப்புக்கு (WISE) தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுயதொழில் உதவிக்கான தையல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1

பிரண்ஸ் அமைப்பின் கீழ் இயங்கும் குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வியல் தேவைகள் மேம்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரனிடம் குறித்த அமைப்பினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த அமைப்பினருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்படன.

2

குறித்த அமைப்பின் தலைவி அமுதா தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் அந்த அமைப்பின் சார்பாக தும்புத் தொழிலை மேற்கொள்வதற்கான இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதியுதவி பெற்றுத்தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

7

குறித்த கோரிக்கைக்கு காலக்கிரமத்தில் தீர்வுபெற்றுத்தருவதாக தெரிவித்த டக்ளஸ்  தேவானந்தா உங்களது சுயமுயற்சிகளுக்கு நாம் இன்னும் வலுச்சேர்க்க வேண்டுமானால் உங்களது அதிகரித்த ஆதரவு எமது கரங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். அந்தப் பலம் எமது கரங்களுக்கு கிடைக்குமாயின் நிச்சயமாக நாம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வெகுவிரைவில் தீர்வுகண்டு தருவோம் என்றார்.

6

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன், கட்சியின் வலி கிழக்கு உதவி நிர்வாக செயலாளர் சந்திரபோஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

5

3

Related posts:

அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் கோட்டையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - இராஜாங்க அமைச்...
ஆர்ப்பாட்டக்காரரின் கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு !

மக்கள் தமது உரிமைகளைக் கோருவது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது அல்ல  - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம...
வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
திறமையானவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...