அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை: நடைமுறைக்கு வந்தது யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை !

Saturday, April 4th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயின் தாக்கம் யாழ் மாவட்டத்திலும் அதிகம் உணரப்பட்டுள்ளமையால் அப்பரிசோதனையை யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த கட்சித் தலைவர்களது கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமைக்கு அமைவாக  அதற்கான ஆளணி மற்றுமம் இதர தேவைகள் வழங்கப்பட்ட நிலையில் இன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தில் சோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இது தொடர்பில் மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் இன்றிலிருந்து குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என தெரிவித்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றதுடன் பல்கலைக்கழகத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதை உறுதிபட கூறுவதாக அவர் தெரிவித்தார்

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில்  கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இருக்கும் நிலையில் அதை இயக்குவதற்கான ஆளணி மற்றும் இதர தேவைகளை பெற்றுக்கொடுத்து யாழ்ப்பாணத்தில் இப்பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருந்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தே...