தீரா பிரச்சினைகள் தீர்க்கப்ட வேண்டும் என்பதே எமது அபிலாசை – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 3rd, 2018

மக்களின் வெற்றியே வீணையின் வெற்றி என்பதை மக்களுக்குத் தெளிவு படுத்தும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர்களதும்  செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம் அப்பகுதிக்கு வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் மனிதநேயத்தை மதித்தும் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் முகமாகமுன்னெடுக்கப்பட வேண்டும்.  மக்களுக்கு சரி எது பிழை எது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் தெளிவூட்டக்கூடியதான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.

இப்பகுதியில் இன்றும் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருக்கின்றன. அவையெல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

அவற்றுக்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நிச்சயம் தீர்வுகளை பெற்றுத்தருவோம். அந்தவகையில் தான் வீணையின் வெற்றியை உறுதிப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை உரியமுறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.27605643_1663997263639354_176965005_o

Related posts:

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை அரசுக்கு நிபந்தனையாக கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - டக்ளஸ் எம்பி ...
கால நிலை தொடர்பில் விழிப்புடன் இருங்கள் - கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!
கம்பஹா, பௌத்தலோக மாவத்தையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையம் கடற்றொழில் அமைச்சர...