திருமலையில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனம்தான் காரணம் – மாவட்ட புத்திஜீவிகள் சுட்டிக்காட்டு!

Saturday, March 27th, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசன சிந்தனையால்தான் திருகோணமலை மாவட்டத்தில் இன்றும் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என மாவட்டத்தின் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருமலை மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் புத்திஜிவிகள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான சந்திப்பகளில் குறிப்பாக மாவட்டத்தின் புத்திஜீவிகளுடனான சந்திப்பின்போது மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக சரியான தமிழ் அரசியல் பிரதிநித்துவம் இல்லைத காரணத்தினால் தாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் சந்தித்துவரவதாக அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய புத்திஜீவிகள் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிவாய்ப்பை உறுதிசெய்யவெண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

கடந்த காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவின் தீர்க்கதரிசனத்தினால் பத்திற்கும் மேற்பட்ட குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டமையால்தான் இன்று திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டிய புத்திஜீவிகள் திருகோணமலை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் பரந்தளவில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திருமலை மாவட்டத்தில் காணப்படும் அரசியல் சூழலை காத்திரமான முறையில் கையாள்வதற்கு பொருத்தமான  தமிழ் தலைமையின் அவசியத்தை உணர்ந்து புத்திஜீவிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் மக்களும் எம்மடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் அந்தக் கனவை நனவாக்க முடியும் என்றும் தெரிவித்திருந்த அமைச்சர் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நாளைதினம் (28.03.2021) ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...
அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின...
எக்ஸ்பிரஸ் பேர்ள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அடுத்தவாரம் இழப்பீடு - 420 மில்லியன் நிதி ஒதுக...