தமிழ் மக்களின் பொருளாதார சிக்கல்களையும் கருத்தில் எடுத்த – சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வரவு செலவுத் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 18th, 2020

சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (17.11.2020) சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 ஏற்படுத்தியிருக்கின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற – ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் நுண்கடன் நிறுவனங்களைக் ஒழுங்குபடுத்தும் வகையிலான பரிந்துரை போன்ற விடயங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை, சிறுபான்மை மக்களுக்கு பொருளாதார தாக்கங்களையும் – அழுத்தங்களையும் ஏற்படுத்தகின்ற காரணிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

Related posts:

எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவா...
கிளிநொச்சி மக்களை கொரோனா பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ...
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர்...

மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வ...
குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது - டக்ளஸ் எம்.பி...
முற்கொம்பன் கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் த...