குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017

குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டால் எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றே நான் கருதுகின்றேன். வடக்கையும் கிழக்கையும் தெற்கையும் சேர்த்தே கூறுகின்றேன். பொதுவாக எமது மக்களிடையே இனவாதம் என்பது கிடையாது. அது இந்த சுயலாப குறுகிய நோக்கங்கொண்ட அரசியல்வாதிகளால் சுழற்சி முறையில் எமது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டு வருகின்றது — என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைதினம் நடைபெற்ற வரவு செலவு திட்ட குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் அண்மையில் ஒரு பாராட்டத்தக்க நிகழ்வினைக் காணக்கூடியதாக இருந்தது. அத்தனகல்ல ரஜ மகா விகாரையின் பிரதம விகாராதிபதியான சங்கைக்குரிய பன்னில ஆனந்த தேரர் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் கம்பகா திகாரிய அல் அஸ்கர் மகா வித்தியாலயத்தின் முஸ்லிம் மாணவர்களது நலன் கருதி ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்;கள் அதை திறந்து வைத்திருந்தார். அந்தக் கட்டிடத்திற்கு மேற்படி பாடசாலை நிர்வாகம் இந்த தேரரின் பெயரையே சூட்டியிருக்கின்றது. தேசிய நல்லிணக்கம் கருதி யாழ்பாணத்தில் இந்து மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கப் போவதாக இந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதான் உண்மையான தேசிய நல்லிணக்கம். மேற்படிக் கட்டிடத்தை அரசாங்கம் கட்டிக் கொடுத்திருந்தால் அது தேசிய நல்லிணக்கமல்ல. அது அபிவிருத்தி – என்றார்.

Related posts:


கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம்...
மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது கூட்டமைப்புக்காக அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் ...
முல்லை. நாயாறு களப்பு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி நடவடிக்கை!