தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்பவரையே ஈ.பி.டி.பி ஆதரிக்கும்.

Tuesday, February 19th, 2019

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலையான அரசியல் தீர்வை வழங்க உத்தரவாதமளிக்கும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஈ.பி.டி.பி ஆதரிக்கும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியின் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்வை சந்தித்தபோது சுட்டிக்காட்டியது.

நேற்றைய தினம் கொழும்பு டொரிங்கனில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்தி;ல் அவரைச் சந்தித்த ஈ.பி.டி.பியின் இளைஞர் அணியின் குழுவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சமகால அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட அந்த சந்திப்பில் ஈ.பி.டி.பியினர் கருத்துத் தெரிவிக்கையில் மாகாணசபைக்கான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் அரசு காலம் தாழ்த்துவதை மக்களுக்கான ஜனநாயக மறுப்பாகவே கருதுகின்றோம்.

மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்தின் கீழ் அந்தச் சபைகள் இயங்க வேண்டும் அப்போதுதான் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியும்.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையையும், அபிலாi~களையும் அதன் நியாயத்தையும் புரிந்துகொண்டு, அதற்கு நிலையான தீர்வொன்றை வழங்குவதற்கு நாம் ஏற்கக் கூடியவாறான உத்தரவாதத்தை வாழங்கும் வேட்பாளருக்கு எமது மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றுத்தருவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும், அபிவிருத்தி உட்பட அன்றாடப்பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுப்பதாகவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவதாகவும், படையினர் வசமுள்ள தனியார் காணிகளை முழுமையாக மீட்டுத் தருவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஏற்றுக்கொள்ளத் தக்க விசாரணைகளை நடத்தி நீதியைப் பெற்றுத் தருவதாகவும், எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் வாக்குறுதி வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு நாம் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாமே முன்னின்று உழைத்திருக்கின்றோம். அரசுகள் ஏமாற்றிவிட்டன என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப்போவதில்லை. நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எனவே மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! என்ற எமது அரசியல் வேலைத்திட்டத்திற்கு அமைய தென் இலங்கை அரசியல் சக்திகளோடு பொதுவான வேலைத்திட்டங்களின் தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி இணைந்தும், வடக்கு கிழக்கு மாநிலத்தில் எமது தனித்துவத்தை முன்னிறுத்தியும் இணங்கிச் செயலாற்றுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் ஈ.பி.டி.பியின் இளைஞர் அணியின் குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எடுத்துரைத்தனர்.




Related posts:

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில் வடக்கு முதல்வர் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மு...
யாழ். மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஒலுவில் துறைமுகத்தின் அபவிருத்தி குறித்த முன்னேற்றங்களை ஆராயும் கலந்துரையா...