அரச காணிகளை தனிநபர்கள் அபகரிக்கு முயற்சி – தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021

வவுனியா மாவட்டத்திலுள்ள அரச காணிகளை தனிநபர்கள் சிலர் அபகரிக்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிடைக்கப்பெற்றுவரும் முறைப்பாடுகளை அடுத்து அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வவுனியா பரன்நட்டகல் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் அரச காணியை தனிநபர் ஒருவர் அனுமதியின்றி சுவீகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

அத்துடன் பிரதேச செயலாளர் மூலம் கிராம சேவையாளர், குறித்த காணி அரச காணி என்றும், இதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென்றும் நோட்டீஸ் ஒட்டப்பட்டும் உள்ளது. ஆனாலும் குறித்த அறிவுறுத்தல் பதாகை அது கிழித்தெறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்திற்குச் சென்று பர்வையிட்டதுடன் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கிராமசேவையாளர் மூலம் குறித்த நபரின் மேல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பணித்துள்ளேன்.

அத்துன் குறித்த காணியை சுவீகரித்தவரிடம் அக்காணியின் உரித்து இருப்பின் பிரதேச செயலாளரிடம் காண்பித்து காணியை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தள்ள திலீபன் தற்போது குறித்த காணியில் போடப்பட்ட கொட்டிலை அகற்றுவதோடு, வேலி போடுவதற்கான நடவடிக்கையையும் நிறுத்துமாறும், குறித்த காணியில் எவ்வித வேலைத்திட்டங்களையும் செய்ய வேண்டாமென்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிசாரை குறித்த காணியை தொடர்ச்சியாக கண்காணிக்குமாறும் கோரியுள்ளதுடன் மரங்கள் வெட்டப்பட்டோ அல்லது வேறு வேலைத்திட்டங்கள் நடந்தாலோ பொலிஸாரும் பொறுப்புக்கூறவேண்டி நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த காணியின் ஒருபகுதிக்குள், அப்பகுதியைச் சேர்ந்த காணியற்ற குடும்பங்களையும், உப குடும்பங்களையும் குடியேற்ற உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் திலீபன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: