தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, June 12th, 2017

ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தமிழ் மக்களது அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி மக்களது வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து  மத்திய அரசை குறைகூறி தாம் தப்பித்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளை பயன்படுத்தி அதனூடாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுப்பதை விடுத்து மத்திய அரசை குறைகூறியும் குற்றம் சாட்டியும் வந்துள்ளனர். வடக்கு மாகாண சபையை பொய் வாக்குறுதிகளால் அபகரித்துக்கொண்ட கூட்டமைப்பினரின் மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் வெளியாகியுள்ளதானது  இன்று வடக்கு மாகாணசபையை ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளதைப் பார்க்கின்றபோது கவலையளிக்கின்றது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படக்கூடிய பல சூழ்நிலைகள் இருந்தும் அவற்றை செயற்படுத்துவதில் கூட்டமைப்பினர் அக்கறைகாட்டவில்லை என்பதுடன் தீர்வுகளை பெற்றுத்தரக்கூடியதான ஆற்றல் அவர்களிடம் இல்லை என்பதே கூட்டமைப்பினரது இவ்வாறான செயற்பாடுகள் நிரூபித்தவருகின்றன என்றும் அவர் சுடடிக்காட்டினார்.

இதன்போது வடமராட்சி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இடர்பாடுகள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன்,  கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் இரட்ணகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
உருவாகியிருக்கும் அமைதியான சூழலை பாதுகாத்து வலுப்படுத்த முனைபவர்களின் கரங்களை மக்கள் வலுப்படுத்த வேண...