குற்றவாளிகளை பாதுகாக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Friday, February 8th, 2019

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு துணைபோகின்றவர்களையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடுபட்டதாக அண்;மையில் வடமராட்சியில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஈ.பி.டி.பிக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் –

கடந்த 05.02.2019 திகதியன்று யாழ்ப்பாணம் மருதங்கேணியில் வைத்து ஞானசேகரம் ரகு மற்றும் தங்கராசா நிசாந்த் ஆகிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ரகு என்பவர் ஈ.பி.டி.பியின் ஆதரவாளர் என்றும், நிசாந்த் என்பவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தச் செய்தியில் ஈ.பி.டி.பியை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டிருப்பதானது  கண்டிக்கத்தக்கதாகும். போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்களாக இருக்கும் அவர்கள் ஈ.பி.டி.பியின் வாகனச் சாரதிகளோ, அவர்களின் உறவினர்களோ இல்லை. அதேவேளை போதைப் பொருள் பாவனையோடு தொடர்புபட்டுள்ள நிலையில் எவரையும் விடுதலை செய்யுமாறு நாம் பொலிஸாரிடமோ, ஆட்சியிலிருப்பவர்களிடமோ எந்தக் கோரிக்கைகளையும் விடுக்கவும் இல்லை. குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஈ.பி.டி.பி ஒருபோதும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கவுமில்லை.

அண்;மையில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்திருந்தபோது அவர்களை விடுதலை செய்வதற்கு அரசியல் அதிகாரங்களை பிரயோகித்து பொலிஸாரிடம் இரவோடு இரவாக தொலைபேசியில் அழுத்தம் கொடுத்தவர்களே இன்று எம்மீது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும், ஏனைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அத்தகையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அநாவசியமான அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் சட்டம் தனது கடமையைச் செய்யவேண்டும் என்பதே ஈ.பி.டி.பியின் நிலைப்பாடாகும்.

Related posts:

எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நட...
தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...
வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவ...

காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் - மன்றில் டக்ளஸ் M.P...
"எமக்கான எதிர்காலத்தை நீங்களே பெற்றுத்தரவேண்டும்" டக்ளஸ் தேவானந்தாவிடம் வட்டக்கச்சி மக்கள்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...