தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை!
Wednesday, September 13th, 2023
செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
குறிப்பாக, சுமார் 184 கடற்றொழில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற செம்பியன்பற்று கிழக்கு, தனிப்பனைக் கிராமத்தினை சிலரின் குறுகிய நோக்கங்களுக்காக இரண்டாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்படு்ம் முயற்சிகளை நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமையவே தீர்மானங்கள் அமைய வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்
000
Related posts:
பொறியியல் பீடத்தை வடமாகாணத்திற்கு கொண்டுவந்தவர்கள் நாமே - டக்ளஸ் தேவானந்தா!
முற்போக்கு சிந்தனையோடு அனைவரையும் அரவணைத்து செயற்பட்டவர் அமரர் ரேணுகா ஹேரத் - டக்ளஸ எம்.பி. தெரிவிப்...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...
|
|
|


