தடுப்பு முகாம்களில் பல கைதிகள் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் வெளியான செய்திகளின் உண்மை நிலைமை என்ன?

Wednesday, May 9th, 2018

இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் காணாமற் போயுள்ளதாகக் கூறப்படுகின்ற பலர் தடுப்பு முகாம்களில் சுய நினைவின்றிக் காணப்படுவதாக அண்மையில் பூசா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் இயக்க உறுப்பினரான நவரத்தினம் நிசாந்தன் என்பவர் கூறியதாக தமிழ் ஊடகங்களில் முன்பக்கச் செய்தியாக வெளிவந்து எமது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மை நிலைமை என்ன? என்பதை அறிய விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

14 கைதிகளுக்கு எதிராக,  பல வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இதுவரையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாதது ஏன்? என்பதை அறிவிக்க வேண்டும். அத்துடன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களது வழக்குகள் ஏற்கனவே அக் கைதிகளுக்கு உறுதியளித்திருந்தமைக்கு இணங்க விரைவாக விசாரிக்கப்படாமல், தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு இழுத்தடிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவது ஏன்? என்பதையும் அறிய விரும்புகின்றேன்.

இவ்வாறான உணர்வுப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து சுமந்திருக்கும் எமது மக்களின் மத்தியில், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்காமல் நீங்கள் இனங்களிடையே ஐக்கியம், தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பதால், அவை ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் த...
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுட...

புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...
அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில்...