டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்!

Saturday, March 11th, 2017
பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் வலியுறுத்தியதையடுத்து, மேற்படி பாலத்தை விரைவில் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கரையோரப் பிராந்தியத்தையும், நாவிதன் வெளி படுவான்கரைப் பிராந்தியத்தையும் இணைக்கின்ற கேந்திர முக்கியத்துவம் பெற்ற கிட்டங்கிப் பாலமெனப்படுகின்ற பகுதி கடந்த பல தசாப்த காலமாக எவ்விதப் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால், வெள்ளம் ஏற்படுகின்ற அனைத்துக் காலங்களிலுமாக தொடர்ந்து இரண்டு, மூன்று பேர் பலியாகி வருவதாகவும், விவசாயம், கல்வி, போக்குவரத்து, பொருளாதாரம், சுகாதாரம் என பல துறைகளிலும் அப்பகுதி மக்கள் பாரிய பாதிப்பு  நிலையை அடைவதாகவும் தெரிய வருகிறது.
950 மீற்றர் நீளமுடைய கிட்டங்கி தாம்போதியுடனான இப்பகுதியில் 75 மீற்றர் நீளமான இரு பாலங்கள் அமைக்கப்பட்டு, ஏனைய தரைப் பாதை புனரமைக்கப்பட்டால், நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கான போக்குவரத்தினை மேற்கொள்வதற்கும், வெள்ள அபாயங்களிலிருந்து மக்கள் பலியாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கும், கொழும்பு – கல்முனைக்கான போக்குவரத்திற்குரிய பிரதான பாதையாக இதனை பயன்படுத்துவதற்கும் இயலும் என்றும் தெரிய வருகின்றது.
எனவே, மேற்படி இரு பாலங்களையும் அமைத்து, பாதையையும் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து இன்று பதிலளித்த உயர் கல்வி மற்றும் பெந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, 75 மீற்றர் நீளமான மேற்படி இரு பாலங்களையும் அமைப்பதற்கு இயலுமென்றும், இதற்கென சுமார் 500 மில்லியன் ரூபா செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இந்தப் பாலங்களை அமைப்பதற்கெனவும், வீதியை புனரமைப்பதற்கெனவும் 2017ம் ஆண்டிற்கென மானியங்கள் ஒதுக்கப்பட்டிராத காரணத்தினால், இதனை நடுத்தர கால அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்ளடக்கி, விரைவில் அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Untitled-2 copy

Related posts:


தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!