சோபையிழந்த நந்திக் கடலுக்கு புத்துயிர் அளிக்கும் அமைச்சர் டக்ளஸின் திட்டம் அடுத்த வாரம் – பிரதேச மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!

Monday, August 17th, 2020

நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் இன்று(16.08.2020) இடம்பெற்றன.

கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இன்றைய இறுதிக் கட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் வட்டுவாகல் பாலத்தை அண்மித்துள்ள நந்திக் கடல் முகத்துவாரப் பகுதியில் குவிந்து கிடக்கின்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், குறித்த முதற்கட்டப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

யுத்தம் மற்றும் தமிழ் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தூர்வாரி புனரமைக்கப்படாத நிலையில் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் நந்திக்கடலில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்களும் சேற்று படுக்கைகளும் நந்திக்கடலின் இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மீன், இறால் போன்ற கடலுணவுகளின் உற்பத்தி குறைவடைந்தமையினால், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டன.

குறித்த விடயம், கடந்த வருட இறுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், குறித்த விடயத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பலனாக நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...