செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்உழைப்பாளர் தினச் செய்தி!
Thursday, April 30th, 2026
…..
நேசத்துக்குரிய என் தமிழ் தேசத்து மக்களே!,..
உறுதி மிக்க உழைக்கும் மக்களே!!,..
உயிரினும் மேலான தோழர்களே!!!,..
உங்களுக்கு வணக்கம்,..
இன்றைய நாள்
உழைக்கும் மக்கள் உரிமை பெற்ற நாள்,..
தமது உரிமைக்காக இரத்தம் சிந்திய நாள்,..
அதுவே மே தினம்,..
உழைக்கும் மக்களே,..
ஒடுக்கப்படுகின்ற தேச மக்களே
ஒன்று படுங்கள் என்ற அறை கூவலை ஏற்று
நாமும்
ஒடுக்கப்படுகின்ற எம் தேச மக்களுக்காகவும்
உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும்
போராட புறப்பட்டவர்கள்,..
மாபெரும் அர்ப்பணங்களை அன்று
போராட்டத்தில் ஈடுபட்ட சகலரும் ஆற்றியிருக்கிறோம்,.
ஆனாலும் சகோதர இயக்க படுகொலைகளாலும்
உள்ளியக்க படுகொலைகளாலும்
எமது உரிமைப்போராட்டம் பலவீனப்பட்டு
திசை மாறியிருந்தது.,,
பின்னர் அது, அழிவு யுத்தமாக மாறத்தொடங்கியது,..
இந்நிலையில் நாம்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை
இறுதித்தீர்வை நோக்கிய
ஆரம்பமாக ஏற்றுக்கொண்டு
எமது
உரிமை போராட்ட வழிமுறையை மாற்றிக்கொண்டோம்,..
பயணத்தை நாம் நிறுத்திவிடவில்லை,..
இலங்கை – இந்திய ஒப்பந்த நடைமுறைகளில்
நாம் பங்கேற்றிருக்கவில்லை.,,
எதற்காக நங்கள் ஆயுதம் ஏந்தி போராடினோமோ
அந்த இலட்சியங்களை வெல்வதற்காகவே
நாம்
மாற்றுக் கொள்கையுடன்
நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டத்தை
முன்வைத்திருந்தோம்
மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
என்பதை இலக்காக முன்னெடுத்து,
தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு,
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக
தேசிய நல்லிணக்க வழிமுறையையும்
தெரிவு செய்திருந்தோம்.
அரசியல் பலத்தை முன்வைத்து
எமது மக்களுக்காக
அரசுடன் பேரம் பேசுவது,…
தேசிய நல்லிணக்க வழிமுறையில்
அரசுடன்
எமது மக்களின்
அன்றாடத் தேவகளுக்கான,
அபிவிருத்திப் பணிகளுக்கான,
அரசியல் உரிமைகளுக்கான
வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது …
இதன் ஊடாக
எட்ட வேண்டிய இலக்கை எட்டுவது,..
இதுவே
எமது மதிநுட்ப
யதார்த்த வழிமுறையாகும்,..
94 ஆம் ஆண்டு
சந்திரிகா ஆட்சியின் போது
நாம்
ஒன்பது நாடாளுமன்ற
உறுப்பினர்களை கொண்டிருந்தோம்,..
ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக
நாம்
இருந்திருக்கவில்லை,..
ஆனாலும் மேலதிக ஆதரவை அரசுக்கு வழங்கி
சக தமிழ் தலைமைகளால்
அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற
சமஸ்டியைவிட மிகச்சிறந்த,
இதுவரையிலும்
எவராலும் கொண்டுவர முடியாத,
அரசியல் தீர்வை உருவாக்கியிருந்தோம்,..
அதை
காரணம் எதுவுமின்றி
சக தமிழ் தலைமைகள்
அன்றைய எதிர்க்கட்சியுடன் சேர்ந்து,
கிழித்து எரிப்பதற்கும்,
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும்
துணை போயிருந்தன.
மக்கள் நலன் சார்ந்தவர்கள்
யார் என்பதை
நீங்கள் புரிந்து கொள்ள
இந்த சாட்சியம் ஒன்றே போதுமானது ,..
தொடர்ந்து வந்த ஆட்சிகளின் போதும்
போதிய அரசியல் பலமின்றியே
எம் தமிழ் தேசம் சார்ந்தும்,
உழைக்கும் மக்கள் சார்ந்தும்,
நீடித்த மக்கள் பணிகளை
நாமே ஆற்றியிருக்கிறோம்.
அழிவு யுத்தத்தில் இருந்து
எம் தமிழ் தேசத்தை
அழகுற
தூக்கி நிமிர்த்தியிருக்கிறோம்,…
சிதைக்கப்பட்ட எமது மக்களுக்கான
உட்கட்டுமானப் பணிகளை
மீளக் கட்டியெழுப்பியிருக்கிறோம்,..
உணவு, மருந்து, நீர், மின்சாரம்,
சுகாதாரம், கல்வி, தொழில் நுட்பக்கல்வி,
போக்குவரத்து, வீடமைப்பு, வேலை வாய்ப்பு,
தொழில் முயற்சி, கடற்றொழில், விவசாயம்,பனைவளம், வாழ்வாதாரம்,
சமுர்த்தி, வறுமை ஒழிப்பு, வாழ்வின் எழுச்சி,
அரசியல் கைதிகள் விடுதலை,
காணிகள் விடுவிப்பு,
புனர் வாழ்வு, புனரமைப்பு, தமிழ் குடியேற்றங்கள், ஆன்மீகத்தலங்கள், நூல் நிலையங்கள், சனசமூக நிலையங்கள், முன்பள்ளிகள்,
தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள்,
வேலையற்ற பட்டதாரிகள்,
என சகல துறைகள் சார்ந்தும்
நாமே அளப்பரிய பணிகளை
ஆற்றியிருக்கின்றோம்,..
இவற்றுக்கும் மேலாக
அழிவு யுத்த காலத்திலிருந்து
எமது மக்களின் உயிர்களையும்
எமது தமிழர் தாயகப் பகுதிகளையும்
இயன்றவரையில் நாம்
பாதுகாத்து வந்துள்ளோம்.
அவற்றை வார்த்தைகளால் அளவிட முடியாது!
உழைக்கும் பாமர மக்களின் வீடுகளில்
அடுப்பெரிய வைத்திருக்கிறோம்,..
1997 இல்
முதன் முதலில்
இராணுவப் பிரசன்னங்களுக்கு மத்தியில் கூட
காணாமல் போனோர் சங்கம் அமைத்து
போராடும் துணிச்சலை
மக்களுக்கு ஊட்டியிருக்கிறோம்,..
13 வது திருத்தச்சட்டத்தை
தொடர்ந்து பாதுகாத்தும்,
வலியுறுத்தியும்
வந்திருக்கிறோம்,..
வரலாறு எம்மை விடுதலை செய்திருக்கிறது.
சகலரும் இன்று எமது வழிமுறைக்கே
வந்துள்ளனர்,..
இனிவரும் காலங்களில்
மக்கள் எமக்கு வழங்கும்
அரசியல் பலத்தில்,..
எமது நிலங்கள்
எமது மக்களுக்கே சொந்தம் என்ற
உரிமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,..
எம் தமிழ் தேசம்
அரசியல் உரிமை பெற்று
தலை நிமிர வேண்டும்,..
உழைப்பவர்
பாமரர்
உரிமைகள் வெல்லப்பட வேண்டும்,..
சமூக சமத்துவ நீதி
ஓங்க வேண்டும்!,..
நாம் செல்லும்
பயணம் வெல்லும்,..
மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி!,..
Related posts:
|
|
|


