சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!

Thursday, November 21st, 2024


தசீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!ற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் ரீ.என் சூரியராஜா தெரிவித்தார்.

இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நல்லூரில் மின்னல் தாக்கம் காரணமாக 1 குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தெல்லிப்பழை சங்கானை, காரைநகர் சண்டிலிப்பாய், கோப்பாய், மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

Related posts:

நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...

பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படு...
முறையான பேருந்து தரிப்பிட விவகாரம் - வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இ...
அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...