அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, June 3rd, 2026அகால மரணமடைந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை வியாபாரிமூலை வட்டார உறுப்பினர் முருகேசு லட்சுகாந்தனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்.
அமரர் முருகேசு இலட்சுகாந்தனின் தனது 80 ஆவது வயதில் நேற்றையதினம் (02.06.2026) அகாலமரணமடைந்தார்.
இந்நிலையில் அமரரது பூதவுடல் வியாபாரிமூலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்க சென்றிருந்த செயலாளர் நாயகம் அஞ்சலி செலுத்தியதுடன் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரைர ஸ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தருமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து - கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும...
|
|
|


