செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்றையதினம் (09) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது குறித்த மாவட்ட மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக சுயதொழில் வாய்ப்பு, வீடமைப்புவசதி, சுகாதாரம், வாழ்வாதார தேவைப்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் போன்றவற்றில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மக்கள் எடுத்துக் கூறியிருந்தனர்.
மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே குறித்த இச்சந்திப்பின்போது தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|