மன்னார் ஜோசப் வாஸ் நகர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நிறைவேற்றம்!

Saturday, September 24th, 2022

மன்னார், ஜோசப் வாஸ் நகர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக விடத்தல் தீவில் இருந்து 1990 ஆம் ஆண்டளவில்  இடம்பெயர்ந்த மக்கள் மன்னார் தீவில் ஜோசப் நகர் எனும் இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

எனினும், குறித்த பகுதியில் குடியமர்த்தப்பட்டவர்கள் தமது ஜீவனோபாயமான கடற்றொழிலில் சுநந்திரமாக ஈடுபடுவதற்கு தேவையான இறங்கு துறை இல்லாத அவலம் தொடர்ந்து வந்தது.

இவ்விடயம் பாதிக்கப்பட்டவர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதுதொடர்பாக கரிசனை செலுத்திய கடற்றொழில் அமைச்சர், குறித்த பிரதேசத்தில் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக இருக்கும் காணியை குத்தகை அடிப்படையில் சம்மபந்தப்பட்ட கடற்றொழில் சங்கத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த காணி உத்தியயோகபூர்வமாக இன்று ஜோசப் வாஸ் நகர் கடற்றொழில் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே

மீன் பிடிப் படகுகள் உட்பட்ட மீன்பிடிச் சாதனங்களை உற்பத்தி செய்கின்ற, சீநோர் நிறுவனத்தின் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும்  தொடர்பாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், தேவையான ஆலோசனைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: