சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் !

வடமாராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், களப்புத் தொடுவாய் பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
குறிப்பாக, இப்பிரதேசத்தில் வீச்சு வலையைப் பயன்படுத்தி பாரம்பரியமாக இறால் பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அண்மைக்காலமாக ஒரு பகுதியினரால் கூட்டு வலைப் பயன்படுத்தப்படுவதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்படடது.
இதன்போது, மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரபாகரமூர்த்தி, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரன், நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாணத்திற்கான பிரதானி நிருபராஜ் உட்பட துறைசார் அதிகாரிகளும் இணைந்து கொண்டனர்
00
Related posts:
இலங்கையின் கடன் நிலை எதிர்மறையான பேறுபேற்றைக்கொண்டுளது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்ட...
மீன்பிடிப் படகுகளில் மீள் புதிப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி - இந்தியத் தனியார் முதலீட்டாளர்க...
சிலாபம் மீன்பித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் மண்ணெண்ணை நிரப்பும் பம்பியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...
|
|