சில தகவல்கள் கடைப்பதில் தாமதம் – இல்லையேல் விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 11th, 2024

மதுபோதையில் சிலர் பொன்னாவெளியில் செய்த விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன். ஆனால் சில தகவல்கள் எனக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்டன என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அன்று நான் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை யாரும் தடுக்க முடியாது, மீண்டும் இந்த இடத்துக்கு வருவேன் என கூறிவிட்டு வந்திருந்தேன். அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரது கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தற்போது குறித்த திட்டம் உரிய முறையில் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்த திட்டம் செயற்படுத்தப்படுமாயின் அந்தப் பிரதேசத்திற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படும்.

அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம், இறால் வளர்ப்பு மற்றும் உவர் நீரை நன்னீராகும் திட்டம் என்பன குறித்த நிறுவனத்தினால் ஏற்படுத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு நேற்று இன்று ஆராயப்பட்ட திட்டம் அல்ல வடக்கு மாகாண சபை காலத்திலும் நல்லாட்சி என்று சொல்லப்படும் அரசாங்கத்தின் காலத்திலும் இதற்கான திட்டங்கள் பேசு பொருளாக இருந்தது.

அந்தவகையில் மக்கள் அபிவிருத்திக்கும் நாட்டு அபிவிருத்திகமான திட்டங்களை யாராலும் தடுக்க முடியாததோடு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கைகள் கிடைத்ததும் அசுர வேகத்தில் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்த அமைச்சர் பிரபாகரனால் முடியாததை சில மது போதையர்கள் செய்து விடலாம் என எண்ணிவிடக் கூடாது.

அதேபோன்று எழுபத்தைந்து கள்ள வாக்கு போட்ட தலைவரின் அடியாள் கந்துவெட்டி ஜீவன் போராட்டத்திற்கு மதுபானம் வழங்கி சிலரை அழைத்து வந்தார்.

இவர்களின் ஆட்சியில் என்ன செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் கொரோனா காலத்தில் இரும்புக் கேடர்களை களவாடி விற்றதில் இவருக்கும் பங்கு உள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: