ஜனாதிபதியின் 4 நாள் வடக்கு விஜயம் வெற்றிகரமாக நிறைவு – பெரு மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, January 7th, 2024


……..
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் வெற்றிகரமாக இன்று நிறுவுபெற்றது.

இன்நிலையில் நான்காவது நாளான இன்று இறுதி நிகழ்வாக பனம் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் பனை சார் வாழ்வாதாரத்தை நம்பி இருப்போரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துறைசார் தரப்பினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் பனை தொழில் முயற்சிகளை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும்  வலியுறுத்தினார்

அந்தவகையில் ஜனாதிபதி தனது வடக்கு விஜயம் மிகவும் வெற்றிகரமாக அமைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதியின் நான்கு நாள் விஜயத்தின் முக்கியமான நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நிறைவு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜனாதிபதியை இன்று வடக்கிலிருந்து பெரு மகிழ்வோடு வழியனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக தொண்டர் ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டுக்கு அமைவாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது குறித்த தரப்புகள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ...