சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்!

Wednesday, December 6th, 2017

மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களிலும், மற்றும் நாடு முழவதிலுமுள்ள ஏனைய அரச அலுவலகங்களிலும் கீழுழைப்பு பட்டதாரிகளாக கடமைபுரியும் சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசாங்க சேவையில் பட்டத்தினை அடிப்படைத் தகைமையாகக் கொள்ளாத பதவிகளில் பணிபுரியும் பட்டதாரிகளான, பொது முகாமைத்துவ உதவியாளர்களுக்கு உரிய பதவியுயர்வு, சம்பள அதிகரிப்பு, மற்றும் ஏனைய சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென மேற்படி பொது முகாமைத்துவ உதவியார்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனைய துறைகளில் பட்டதாரியாக உள்ளவர்களுக்கு அவரவர் கடமை புரியும் துறைகளில் உரிய காலத்தில் பதவியுயர்வுகள் வழங்கும் போது முகாமைத்துவ உதவியாளர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதவியுயர்வுகள் கிடைக்கப்பெறுவதில்லை என்றும்,
அந்த வகையில், அரச முகாமைத்துவ உதவியாளர்கட்கு MN-2 சம்பள படிநிலை வழங்கப்படுகின்றது என்றும், பட்டதாரிகளுக்கு MN-4 சம்பள படிநிலை வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளதுடன், அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கு MN-4 சம்பள படிநிலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வகுப்பு தரம் பிரிக்கப்பட்டு iii ii, i என்ற நிலைக்கு நேரொத்த படிநிலைக்கு சம்பளத்தினை மாற்றுதல் வேண்டும் என்றும்,

அமைச்சரவையில் அங்கீகாரம் பெற்று அரச முகாமைத்துவ உதவியாளர் பதவியை மாற்றம் செய்து – பட்டதாரி அரச முகாமைத்துவ உதவியாளர் என்ற புதிய பதவி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

பட்டதாரிகளான அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 24 வருடங்களுக்கு மேல் சேவையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து, கணக்காளர் சேவை, இலங்கை நிர்வாக சேவை, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சேவை, கணக்காய்வு உத்தியோகத்தர் பதவி, புலனாய்வு உத்தியோகத்தர் பதவி, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பதவி போன்ற நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,

மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகள், உள்@ராட்சி மன்றங்களிலும், மற்றும் நாடு முழவதிலுமுள்ள ஏனைய அரச அலுவலகங்களிலும் கீழுழைப்பு பட்டதாரிகளாக கடமைபுரியும் சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் விடுக்கின்ற கோரிக்கை தொடர்பில் கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் பரிசீலித்துப் பார்த்து சாதகமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அவசர சந்திப்பு!