சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.
சிலாபம் பிரதேச கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் சம்மந்தப்பட்ட பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கெண்டிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாகவும் விடயங்களை அவதானித்த நிலையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களம் – நக்டா – நாரா ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிலாபம் பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.
முன்பதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வியாபாரிகளுக்கான ஐஸ் கட்டி விநியோகத்தை நியாயமான விலையிலும் சீரான முறையிலும் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையைில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், மீன் சந்தை நிர்வாகத்தினர் மற்றும் ஐஸ் கட்டி விநியோகஸ்தர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000\
Related posts:
|
|