சிற்றூழியர் நியமனம் அந்தந்த மாவட்டங்களுக்கே வழங்கப்பட வேண்டும்- நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, June 6th, 2018
ஏனைய மாகாணங்கள் வேலைவாய்பற்றோரைக் குறைந்தளவில் கொண்டிருந்தாலும், அந்த மாகாணங்களில் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று, வேலை செய்வதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வருகின்ற நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையற்றோர் தொகை குறைவடையக்கூடிய நிலைமைகள் இல்லாதுபோகின்ற நிலைமை காணப்படுகிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற  கடை, அலுவலக ஊழியர்கள் – ஊதியம் மற்றும் ஊழியம் ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம், மகப்பேற்று நன்மைகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
எமது நாட்டைப் பொறுத்தவரையில் வேலையற்றோரது பிரச்சினையானது ஒரு தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. இந்ந நிலையில் பார்க்கின்றபோது, கடந்த ஆண்டின் தரவுகளின் பிரகாரம் வேலையற்றோர் மிகக் கூடிய மாகாணமாக 7.7 வீதம் கொண்டு வடக்கு மாகாணமும், இதற்கு அடுத்த நிலையில் 6.0 என்ற வீதத்தில் கிழக்கு மாகாணமும் காணப்படுவதாகவும், மாவட்ட ரீதியில் எடுத்துக் கொண்டால், 10.7 வீதமான அதி கூடிய வேலையற்றோர் இருக்கின்ற மாவட்டமாக யாழ்ப்பாணம் மாவட்டமும், அதற்கடுத்த மாவட்டங்களாக 6.6 வீதமான நிலையில் மட்டக்களப்பு மாவட்டமும், 6.4 வீதமாக திருகோணமலை மாவட்டமும் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
இந்த வகையில், வேலைவாய்ப்புகளற்Nhறர் தொகை அதிகரித்துள்ள நிலையில், இவர்களில் ஆண்களைவிட மும்மடங்கு அதிகளவில் பெண்கள் வேலைவாய்ப்புகளற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
எமது பகுதிகளைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் அரச தொழில்வாய்ப்புகள் உள்ளிட்ட, சுய தொழில் முயற்சிகள் பலவும் எமது அணுகுமுறைகள் காரணமாக எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக்கூடிய நிலையில் நாம் இருந்திருந்தோம். அந்த வகையில் மேலும், பல வேலைவாய்ப்புகளை எமது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் இப்போதும்கூட எமது பகுதிகளில் இல்லாமல் இல்லை. என்றாலும், அதற்குரிய அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இல்லை. எனவே, தற்போது அரசியல் அதிகாரங்களில் இருப்பவர்கள் எமது மக்களின் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு மத்தியில்  அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். அதற்கான வாய்ப்புகள் நிறையவே அவர்களிடம் இருக்கின்றன. எனினும், அதற்கான விருப்பின்மை, ஆற்றலின்மை, இயலாமை போன்ற மூன்று குணங்களையும் இந்த அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் கொண்டிருப்பதனால், எமது மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலைமையிலேயே இருந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது, எமது மக்களுக்குரிய வேலை வாய்ப்புகள் ஏனைய மாகாணங்களில் வாழுகின்றவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் எமது பகுதிகளில் பணிக்கு வந்து, மொழிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களால், அந்தப் பணிகளின் ஊடாக எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பயன்களும் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமைகளே தொடர்கின்றன.

Related posts:

சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று  அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!