சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

வேலணை, சாட்டி கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
வருடம் தோறும் பங்குனி – புரட்டாதி வரையான காலப்பகுதியில் உருவாகின்ற கடல் பாசியை சேகரிக்கும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு சுமார் 40 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கடல்பாசி சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.
000
Related posts:
யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொட...
ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் -...
|
|