சரியானவர்களை சரியான இடத்திற்கு தெரிவு செய்யும் பட்சத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Monday, September 9th, 2024

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு விடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவே. எனவே அவரையே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்து நாட்டை முன்னோக்கி வழி நடத்த மக்கள் ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கோட்டுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி சரியானவர்களை சரியான இடத்திற்கு தெரிவு செய்கின்ற பட்சத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

முல்லைத்தீவு மல்லாவியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார் .

000

Related posts: