சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அமைச்சரவை அங்கீகரித்தது.
Tuesday, November 27th, 2018
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்த விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இன்று(27.11.2018) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இம்மாதம் 17ஆம் திகதி அமைச்சரைச் சந்தித்த கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப சுவாமிகளின் பிரதிப்குமார் தலைமையிலான யாத்திரைக்குழுவினர், சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள அனைத்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் சார்பில் விடுத்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Related posts:
ஊடகத் துறையானது மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்!
நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அ...
|
|
|


