சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து!

Tuesday, March 14th, 2023

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தாவில், முகமாலை போன்ற இடங்கள் உட்பட மாவட்டத்தில்  மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் போதைப் பொருள் பரவல் மற்றும் சமூகச் சீர்கேடுகளில் இருந்து எமது இளைய தலைமைுறையினரை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 72 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் சத்திர சிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் உற்பத்திகளில், சுமார்  5 இலட்சத்து 85 ஆயிரத்து 832 கிலோகிராம் நெல்லை இதுவரை விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் கிலோ 100 வீதம் கொள்வனவு  செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

இக்கலந்துரையாடலில், மாவட்டத்தின் சமூகப் பாதுகாப்பு, அபிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
நந்திக்கடல் ஆளமாக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் – ...
கரைச்சி பூநகரி பிரதேச சபைகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு புத...