கோம்பயன்மணல் இந்து மயானத்தில் யாழ்-போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் எரியூட்டி – சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, March 29th, 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி  கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – ...
யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர...
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஐவர் கொண்ட விச...