யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, July 23rd, 2020

திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த சந்தை வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுபவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

கொறேனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சுகாதார நடைமுறைகளின் போது பாராபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய வர்த்தகர்கள், குறித்த நடவடிக்கை காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அத்துடன், அண்மைக் காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் வர்த்தகர்களினால் எடுத்துக் கூறப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  தகவல்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள், குறித்த விவகாரத்திற்கு  நியாயமான முறையில் தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மத்தியில் உறுதியளித்தார்.

இதனிடையே நெல்லியடிப் பொதுச் சந்தைக்கும் சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தை நடவடிக்கைகளை அவதானித்ததுடன் வியாபாரிகளின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்...
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் ...

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்...
ஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...