கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடுப்பார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, April 20th, 2020

நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சரியான முடிவை எடுத்திருந்தது போல நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சர்ச்சைக்கும் தீர்வுகாண சரியான முடிவையே எடுப்பார் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

கொரோனா என்ற கொடிய தொற்றை எதிர்கொள்ள துறைசார் தரப்புகளான அமைச்சுக்கள், மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்புக்களை ஒன்றிணைத்து ஜனாதிபதி கோட்டபய ராயபக்ச எவ்வாறு சரியான தலைமைத்துவத்தை கொடுத்து அத்தொற்றை நாட்டில் பரவவிடாது வெற்றிகண்டாரோ அதே போல இலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கள் பாதுக்காகப்படும் வகையில் தேர்தலை நடத்துவதா இல்லையான என்ற கேள்விகளுக்கும் பொருத்தமான தீர்வை வழங்குவார் என நம்புகின்றேன்.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இருப்பதனால் தான் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய தொற்றை எதிர்கொண்டு எமது நாடு வெற்றிகண்டுள்ளது என்ற உணர்வு மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ளது.

நாட்டின் தேவையறிந்து சரியான தலைமையை கொடுக்கும் வகையான தலைவராக  கோட்டபய ராஜபக்ச இருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான தீர்வொன்றையும் வழங்குவார் என்று நம்புகின்றோன். அதற்கு பூரணமான ஒத்துழைப்பை நாட்டு மக்கள் அனைவரும் வழங்கவேண்டும்.

குறிப்பாக சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி அவர்களால் கூறப்படும் அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக கடைப்பிடித்துடன் கொரோனா தொற்றை முற்று முழுதாக எமது பகுதிகளிலிருந்து ஒழித்து இயல்பு நிலையை முழுமையாக கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:

நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
ஓஷன்பிக் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் நீர்வேளாண்மை அபிவிருத்தி - அமைச்சர் டக்ளஸ் தல...
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில்...

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்...
அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் - அர...