குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் இரு சிற்றூழியர்களும் நியமனம்!
Saturday, June 1st, 2024
கிளிநொச்சி தர்மபுரத்தில் அமைந்துள்ள பிராந்திய போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (01.006.2024) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பொழுது போக்கிற்காக கட்சி நிதியில் இருந்து தொலைக்காட்சி ஒன்றினையும் வழங்கி வைத்தார்
கிஇதேநேரம் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து வைத்தியசாலைக்கு நேரில் சென்ற அமைச்சர் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து துறைசார் தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே குறித்த வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை சீர்செய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடி தீர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக வைத்தியசாலையில் இருந்துவரும் சிற்றூழியர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வை வழங்கம் முகமாக கட்சி நிதியில் இருந்து ஊதியம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்து. சமையலாளர் மற்றும் காவலாளி ஆகியோர் எதிர்வரும் திங்கள்கிழமைமுதல் சேவைகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


