கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 5th, 2018

இன்றுவரை பெரும் இழுபறி நிலையிலுள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பில் விரைவான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஒரு தொகுதி தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.

தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்காமையால் தாம் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருவதாகவும் தாம் எதிர்கொள்ளும்  பிரச்சினைக்ள தொடர்பில் அவதானம் செலுத்தி தமக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தருமாறும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

 456 தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் அமைசரவைப் பத்திரம் சமர்ப்பித்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு தொண்டர் 1

கிழக்கு தொண்டர் 2

Related posts:


காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள்  - டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்க...
வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - டக்ள...