கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Sunday, June 7th, 2020

கிழக்குமாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைசெய்வதற்காக அமைக்கப்பட்ட செயலணிக்குழு அவர்களது முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது கிழக்குமாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்குமான பொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களிடம் கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காண்பதற்கும், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களை முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான நடைமுறையை இனங்கண்டு செயற்படுத்துவதற்கும், சட்டரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்கு தேவையான செயற்பாடுகளை எடுப்பதற்கும் மற்றும் அவ்விடங்களின் கலாசார பெறுமதிகளை பாதுகாத்து அவ்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான சிபார்சுகளை சமர்ப்பித்தலுக்குமாக ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் அவரின் செயலாளர்பி.வி. ஜெயசுந்தர அவர்களினால் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்படுவதாக அண்மையில வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த செயலணியின் நடவடிக்கைகளின்போது கிழக்கில்வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக் வேண்டும்என்றுஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு 04.05.2020 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அக்கடிதத்தில்

“கிழக்குமாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைசெய்வதற்காக தங்களால் அமைக்கப்பட்ட குழு அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அங்கு வாழும் தமிழ் பேசும்மக்களின்; கருத்துக்களையும் உள்வாங்குவதற்குமான ஒருபொறிமுறையைஉருவாக்கவேண்டும்”என்றும்கோரப்பட்டுள்ளது.

Related posts:

13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை - அடித்து சொல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்...
வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது - காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு மாநாட...