கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 1st, 2023

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி மாவட்டத்தினுள் கொண்டு செல்லத்  தடை செய்யப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்,  சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே, குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

வெளி மாகாணங்களை சேர்ந்த அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி, கிளிநொச்சி மாவட்டத்தில் அகழப்படுகின்ற சட்டவிரோத மணல், பிரதான வீதியினால் எடுத்துச் செல்லப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  துறைசார் அமைச்சர், துறைசார் திணைக்கள தலைவர் ஆகியோருடன்  தொடர்புக்கொண்டு கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாகாணங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு மணல் எடுத்து வருவதை தடுப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல்கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே  - வடக...
இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களில் முறையாகக் கிடைப்பதில்லை என மக்கள் கவலை – டக்ளஸ் எ...
இறந்த நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குரல்கள் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது - நாடாளுமன்ற...

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள்  - கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் ...
வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றுத்தி...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கைய...