தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் குரல்கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே  – வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Tuesday, June 26th, 2018

மக்கள் நலன்கள் சார்பாக நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல்கொடுப்பது மட்டுமன்றி மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களை முன்வைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்டக் குழு ஒன்று வடக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பின் போது கடந்த காலங்களில் மட்டுமல்லாது நிகழ்காலத்திலும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் உள்ளடங்கலான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தென்னிலங்கை அரசியல் தலைமைகளோடு உள்ள நல்லுறவு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்த அதேவேளை கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரங்களில் இருந்தவர்களுடன் கொண்டிருந்த இணக்க அரசியலினூடாக யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடபகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவருத்தி மற்றும் மக்கள் நலன் சார் விடயங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

அதனடிப்படையில் எதிர்காலங்களிலும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் கட்சியின் வகிபாகம் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டிருந்தது.

அத்துடன் 2020 இல் புகையிலைச் செய்கை தடைசெய்யப்படும் பட்சத்தில் அதற்கு மாற்றீடாக மாற்றுப்பயிர்ச்சைய்கை தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு போதிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களை உள்வாங்குவது சுகாதார தொண்டர்களை நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்குவது திக்கம் வடிசாலையை மீள் புனரமைப்புச் செய்வது பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் தவிசாளரும் சர்வதேச அமைப்பாளருமான மித்திரன், கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின், கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகலால ஆளுநரின் உதவிச் செயலாளர் செல்வநாயகம் பிரத்தியேக செயலாளர் சோமசிறி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி ...
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...