கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்கிவைத்த ஜனாதிபதி!
Saturday, May 25th, 2024
உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று (25) கிளிநொச்சியில் நடைபெற்றது.
யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் இன்றையதினம் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!
அமைச்சர் டக்ளஸ் தலையீடு - கைவிடப்பட்டது இ.போ.ச வின் பணிப்புறக்கனிப்பு!
"எதற்கும் தயாராக இருங்கள்" - கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


