களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் – கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி வேண்டுகோள்!
Saturday, December 9th, 2017
களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டுமென்பதுடன் இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏதாவது விN~ட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
2018 அம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் வாய் மொழி விடைக்கான கேள்வி நேரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுதியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம கல்வி வலயத்தின் கீழுள்ள கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் கல்வி கற்று வருகின்றனர். மேற்படி பாடசாலையில், ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கென அடிக்கல் நாட்டப்பட்டது.
நான் இது தொடர்டபில் இது தொடர்பில் கேள்வி கேட்டு தற்போது 05 மாதங்கள் கழிந்து விட்டுள்ளன. இன்றைய நிலையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லையேல் அது தொடர்பான நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts:
|
|
|


