கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, February 9th, 2021

கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கட்டைக்காடு, போக்கறுப்பு, சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் இருக்கின்ற சுமார் 47 கரைவலை பாடுகள் எனப்படும் ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில், சீரான தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பாடுகளை, குறித்த பாடுகளின் பரம்பரையினருக்கு அல்லது புதிதாக தொழில் செய்ய விரும்புகின்றவர்ளுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பு யாழ்ப்பாத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது மருதங்கேணி பிரதேச செயலர், கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உட்பட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே இரணைதீவு பிரதேசத்தில் பாரிய கடலட்டை பண்ணையை உருவாக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் திட்டம் இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில்,   திட்டதினை ஆரம்பிப்பதற்கு தேவையான யாப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சருக்கும் இரணைதீவு கடலட்டை வளர்ப்போர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
யாழ் நகர சிற்றங்காடி வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று...
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...