கரையோரம் பேண் திணைக்களம் இடையூறு – அறுகம்பை சுற்றுலா மைய தொழில் முயற்சியாளர் அமைச்சர் டக்ளஸிடம் முறையீடு!
Tuesday, January 24th, 2023
அம்பாறை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான சுற்றுலா மையம் ஒன்றினை நடத்தி வருகின்ற தனியார் தொழில் முயற்சியாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சுற்றுலா மையம் சொந்தக் காணியில் கடந்த 34 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கரையோரம் பேண் திணைக்களத்தினால் இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மதிப்பை பெற்ற தமது, சுற்றுலா மையத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு உதவுமாறு முதலீட்டாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி, நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். – 24.01.2023
Related posts:
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படை...
தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
|
|
|


