கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Wednesday, July 28th, 2021

கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம்  வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது.

இதன்மூலம் அந்நியச் செலாவணியைப் நாட்டிற்கு மீதப்படுத்துவதுடன் உள்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த இலக்கை எட்டுவதற்காக, கருவாடு உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் நவீன் தொழில்நுட்பங்களையும் இயந்திர உபகரணங்களையும்  உள்வாங்குவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Related posts:

மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - திருமலையி...
கூட்டமைப்பின் தடையினால் வெடுக்குநாரி விவகாரத்தை தீர்க்க முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்...
19 வது திருத்தச் சட்டத்தால் உருவான சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையிலேயே சுயாதீனமாக செயற்பட்டனவா? – நா...